உள்நாடு

சில உணவு பொருட்களின் விசேட பண்ட வரி அதிகரிப்புக்கான புதிய வர்த்தமானி வெளியீடு !

(UTV | கொழும்பு) –  உளுந்து, பாசிப்பயறு , கௌபி , சோளம், குரக்கன் மற்றும் தினை ஆகியவற்றின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் விசேட பண்ட வரியை உயர்த்தி புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானியின்படி, உளுந்து (மற்றவை) இதுவரை ஒரு கிலோ கிராமிற்கு 200 ரூபாவாக காணப்பட்ட விசேட பண்ட வரி 300 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கௌபி (மற்றவை), விதை குரக்கன், விதைகள் – (தினை) உள்ளிற்றவைக்கான இறக்குமதி விசேட பண்ட வரி ஒரு கிலோ கிராமிற்கு 70 ரூபாயிலிருந்து 300 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இது தவிர சோளத்துக்கும் 25 ரூபாய் விசேட பண்ட வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, சோளம், உளுந்து, பச்சைப்பயறு, கௌபி மற்றும் குரக்கன் ஆகியவற்றின் இறக்குமதியை விவசாய அமைச்சின் பரிந்துரையின் பேரில் மேற்கொள்ள வேண்டுமென வர்த்தமானி அறிவித்தலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

19 கோடி பெறுமதியான நகைகள், தங்க பிஸ்கட்டுகள் மற்றும் வெளிநாட்டு நாணயங்களுடன் மூவர் கைது

வெளிநாட்டுப் பெண் மரணம் – மற்றுமொருவர் கவலைக்கிடம் – காரணம் விஷ வாயுவா ?

editor

இலஞ்சம் பெற்ற அரச அதிகாரி கைது

editor