கிசு கிசு

சிறைச்சாலையில் தன்னந்தனியே குழந்தை பெற்றெடுத்த பெண்

(UTVNEWS|COLOMBO) – எவ்வித மருத்துவ உதவியும் இன்றி பெண் ஒருவர் தான் தனியே சிறைச்சாலையில் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் ஒன்று அமெரிக்காவின் கொலராடோவில் பதிவாகியுள்ளது.

தான் தனியே சிறைச்சாலையில் குழந்தையை பெற்றெடுத்ததாக குற்றஞ்சாட்டியுள்ள பெண் கைதி ஒருவர் உள்ளூர் நிர்வாகம் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.

கடந்த வருடம் ஜூலை மாதம், 26ஆவது வயதில், அடையாள திருட்டு குற்றச்சாட்டின் கீழ் டயானா சான்செஸ் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்று உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

மாவட்ட சிறையில் கழிப்பறையிலிருந்து சில அடி தூரத்தில் இருந்த, குளிர்ந்த கடினமான மேசையில் தனது குழந்தையை பிரசவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததாக டயானா சான்செஸ் தனது குற்றச்சாட்டில் தெரிவித்துள்ளார்.

தான் பிரசவிக்கும் சூழ்நிலையில் இருப்பதை அறிந்த சிறைச்சாலை அதிகாரிகள் வேண்டுமென்றே அலட்சியம் செய்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தாங்கள் ஆய்வு மேற்கொண்டபோது, சிறைச்சாலை அதிகாரிகள் சரியான முறையில் செயலாற்றியது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

சுகாதார அமைச்சருக்கே நெஞ்சு வலி வரும் போது நாட்டு மக்களின் நிலை என்னவாகும் [VIDEO]

பதவி விலகத் தயாராகும் ‘மஹிந்த’

5 வருடங்கள் சிறைத்தண்டனை என விஜய்க்கு எச்சரிக்கை!