உள்நாடு

சிறைச்சாலையிலிருந்து தப்பி செல்ல முயன்ற கைதி சடலமாக மீட்பு

(UTV | கொழும்பு) –  பல்லேகலை திறந்தவெளி சிறைச்சாலை முகாமில் இருந்து மகாவலி ஆற்றில் குதித்து தப்பிச் செல்ல முயன்ற கைதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு ஆற்றில் குதித்து தப்பிச்செல்ல முற்படுகையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

நீரில் மூழ்கிய கைதி கொழும்பு 15 ஐச் சேர்ந்த 34 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்படி பல்லேகல பொலிஸார் மற்றும் கடற்படையினரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னர் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறைக்கைதி காவலில் இருந்து தப்பி மகாவலி ஆற்றில் குதித்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கை போக்குவரத்து சபைக்கு 2500 புதிய பேருந்துகள்

சீசெல்ஸ் நாட்டிலிருந்து 254 பேர் தாயகம் திரும்பினர்

கொழும்பில் வலுக்கும் கொரோனா தொற்றாளர்கள்