உள்நாடு

சிறைச்சாலை பேரூந்து விபத்தில் 09 பேர் காயம்

(UTV| குருநாகல் ) – அம்பன்பொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலுவிலபதான பிரதேசத்தில் சிறைச்சாலை பேரூந்து ஒன்று விபத்திற்குள்ளானதில் பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இன்று(23) காலை கல்கமுவ நீதிமன்றில் இருந்து மஹவ சிறைச்சாலைக்கு சந்தேகநபர்களை ஏற்றிச் சென்ற பேரூந்து, கிளை வீதி ஒன்றில் இருந்து பிரதான வீதிக்கு பின்னால் பயணித்த லொறியில் மோதி கவிழ்ந்ததில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கூர்த்த இந்த விபத்தில் சிறைச்சாலை பேரூந்து சாரதி உள்ளிட்ட மூன்று அதிகாரிகளும் மற்றும் 9 சந்தேகநபர்களும் காயமடைந்துள்ளனர்.

விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் நாளை(24) மஹவ நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

விபத்து சம்பவம் தொடர்பில் அம்பன்பொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

இயல்பு நிலையை கொண்டுவரும் மூலோபாய திட்டம் இவ்வார இறுதியில்

உலக பசி சுட்டெண்ணில் இலங்கைக்கு 64வது இடம்

பாதாள உலக குழுவினருக்கான கடவுச்சீட்டில் இவ்வளவு மோசடியா?