உள்நாடு

சிறைச்சாலை தீர்ப்பாயத்தில் திலினி பிரியமாலி

(UTV | கொழும்பு) – பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி இன்று (03) சிறைச்சாலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

சட்ட விரோதமாக தடைசெய்யப்பட்ட கையடக்கத் தொலைபேசியை வைத்திருந்தமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் வெலிக்கடை சிறைச்சாலையில் நடைபெற்ற கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி தலைமையிலான சிறைச்சாலை நீதிமன்றில் அவர் ஆஜர்படுத்தப்பட்டதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர், மேலதிக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் சந்தன ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.

சந்தேக நபருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மேலதிக விசாரணைக்காக கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி நிராகரித்துள்ளார். மேலும், வரும் 24ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது என்றார்.

Related posts

ஜனாதிபதி வேட்பாளர் மீது தாக்குதல் மேற்கொள்ள திட்டம்.

editor

குப்பைகளுக்காக நான்கு ரயில் இயந்திரங்கள் இறக்குமதி

 இலங்கைக்கு ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியது IMF