உள்நாடு

சிறைக்கைதிகளை பார்வையிட இன்று முதல் அனுமதி

(UTV | கொழும்பு) – இன்று (01) சிறைக்கைதிகளை பார்வையிடுவதற்கு மீண்டும் அனுமதி வழங்கப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, வாரத்தில் ஒரு தடவை, ஒருவருக்கு மாத்திரம் இதற்கான அனுமதி வழங்கப்படவுள்ளதோடு, குறித்த நபர் சிறைக்கைதியின் நெருங்கிய உறவினராக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட கைதிகள் 21 நாட்களுக்கு பார்வையிட அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, வெளியில் இருந்து கொண்டுவரப்படும் உணவு பொருட்களை சிறைக்கைதிகளுக்கு வழங்குவதற்கு தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நாட்டின் மிகப்பெரிய சீமெந்து தொழிற்சாலை திறக்கப்பட்டது

அரச வைத்தியசாலைகளுக்கு ஆபத்து – துண்டுக்கப்படும் மின்

குணமடைந்து வீடு திரும்பியவருக்கு மீண்டும் கொரோனா