உள்நாடு

சிறுவர் மீதான வன்முறை முறைப்பாடுகள் அதிகரிப்பு

(UTV|கொழும்பு)- இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சிறுவர் மீதான வன்முறை மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடர்பாக 800 இற்கும் அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் முதித்த விதானபத்திரன குறிப்பிட்டுள்ளார்.

பெற்றோர் மற்றும் ஆசிரியர்களால் தாக்கப்பட்டமை தொடர்பிலேயே, அதிக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சிறுவர் துஷ்பிரயோகங்களைக் குறைப்பதற்காக, தௌிவூட்டும் நிகழ்வுகளை பாடசாலைகள் மட்டத்தில் முன்னெடுப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக பேராசிரியர் முதித்த விதானபத்திரன கூறியுள்ளார்.

Related posts

ஒரு இலட்சம் Pfizer தடுப்பூசி டோஸ்கள் வந்தடைந்தன

1700 ரூபா சம்பளம்: நீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்பு

கோழி இறைச்சிக்கு தட்டுப்பாடு