சூடான செய்திகள் 1

சிறுவர் பூங்கா ராட்டினம் விபத்து-கைது செய்யப்பட்டவர்கள் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) கம்பஹா, நைவல பகுதியில் உள்ள தனியார் பூங்கா ஒன்றில் உள்ள ராட்டினம் ஒன்றின் ஒரு பகுதி உடைந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 6 பேரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அவர்களை எதிர்வரும் 13 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் சம்பவ இடத்தில் 47 வயதுடைய தாய் ஒருவர் உயிரிழந்திருந்ததுடன் பலத்த காயங்களுடன் மகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எவ்வாறாயினும் விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான 13 வயதுடைய சிறுமி இன்று காலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

 

Related posts

தனியார் பேரூந்து பணியாளர்கள் பணி புறக்கணிப்பில்

மதஸ்தலங்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு! தொலைபேசி இலக்கமும் அறிமுகம்

பிரதமர் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்துக்கு விஜயம்