வகைப்படுத்தப்படாத

சிறுமியொருவருக்கு நடந்துள்ள கொடூரம்!!

(UDHAYAM, COLOMBO) – பர்மாவில் வீட்டு வேலை செய்து வந்த 13 வயது சிறுமியை மின்னழுத்தியை பயன்படுத்தி சூடு வைத்த கணவன் மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.

பர்மாவில் வீட்டு வேலை செய்து வந்த 13 வயது சிறுமி மீது தம்பதியினர் மின்னழுத்தியை பயன்படுத்தி சூடு வைப்பது மற்றும் சுடு தண்ணீர் அவர் மீது ஊற்றுவது என்று பல்வேறு கொடுமைகள் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் பல பகுதிகளில், வறுமைக்குள்ளான இளம் பிள்ளைகள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, மற்றவர்கள் வீட்டில் உதவியாளர்களாக வேலை செய்து வருகின்றனர்.

அப்போது அங்கு அந்த சிறுவர், சிறுமியர்கள் அடிக்கடி பல்வேறு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகிறார்கள். அந்த வகையில் ஒரு சம்பவம் தான் பர்மாவில் நடந்துள்ளது.

பர்மாவின் யங்கூன் நகரை சேர்ந்த தம்பதி துன் துன் (32)- மயத் நொயி து (30). இவர்கள் தங்கள் வீட்டு வேலை செய்து வந்த 13 வயது சிறுமியை மின்னழுத்தியை பயன்படுத்தி சூடு வைத்து உள்ளனர்.

அக்கம் பக்கம் உள்ளவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இவர்களை அண்மையில் பொலிஸார் கைது செய்தனர்.

அதன் பின் இது குறித்து பொலிஸார் கூறுகையில், கடந்த 3 ஆம் திகதி இது தொடர்பான தகவல் வந்தது.

அதைத் தொடர்ந்து இவர்கள் வீட்டிற்கு சென்ற போது அங்கு வேலை பார்த்து வந்த சிறுமியின் நிலைமை தெரியவந்தது என கூறினர்.

Related posts

Andy Murray to partner Serena Williams in Wimbledon mixed doubles

SLPP signs MoU with 10 political parties

பாகிஸ்தானுக்கு 1 டொலர் கூட நிதி வழங்கக்கூடாது