உள்நாடு

சிறுமி துஷ்பிரயோகம் – தந்தை கைது

(UTV | பொத்துவில்) –  சிறுமி துஷ்பிரயோகம் – தந்தை கைது

பொத்துவில் பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் தனது 14 வயதுடைய மகளான சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டுவந்த பொலிஸ் சிவில் பாதுகாப்பு உத்தியோகராக கடைமையாற்றிவரும் தந்தையை இன்று (26) கைது செய்துள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்

குறித்த பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 14 வயது சிறுமியை அவரது தந்தை கடந்த 3 வருடங்களாக பாலியல் துஸ்பிரயோகம் மேற் கொண்டுவந்த நிலையில் தேசிய சிறுவர் பாதுகாப்பு சபையின் அவசர பிரிவான 1929 தொலைபேசி இலக்கத்திற்கு பாதிக்கப்பட்ட சிறுமி முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து பொத்துவில் பிரதேசத்தில் பொலிஸ் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றிவரும் 38 வயதுடைய சிறுமியின் தந்தையை சம்பவதினமான இன்று காலை கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸதர் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஷானிக்கு எதிரான வழக்கின் 4வது சந்தேக நபர் நீதிமன்றில்

கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மக்கள் காங்கிரஸில் இணைவு

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்- 3 ஆவது  நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்  முன்னெடுப்பு