சூடான செய்திகள் 1வணிகம்

சிறுதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வர்த்தக கண்காட்சி…

(UTV|COLOMBO)-‘மட்டு முயற்சியாண்மை – 2018’ எனும் தொனிப்பொருளிலான சிறுதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வர்த்தக கண்காட்சி எதிர்வரும் நவம்பர் 03 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

மாவட்ட செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இந்த கண்காட்சி எதிர்வரும் 03,,04,05 ஆம் திகதிகளில் மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் நடைபெறவுள்ளது.

காலை 10.00 மணி தொடக்கம் இரவு 10.00 மணி வரை நடைபெறவுள்ள இந்த கண்காட்சி மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களின் உற்பத்திகளை ஊக்குவிக்கும் முகமாகவும் அவர்களுக்கான ஒரு சிறந்த சந்தை வாய்ப்பாகவும் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலகங்களைச் சேர்ந்த சிறிய மற்றும் நடுத்தர உற்பத்தியாளர்களின் கைவினைப் பொருட்கள், உணவு உற்பத்திகள், பனையோலை உற்பத்திகள், கைத்தறி உற்பத்திப்பொருட்கள், மட்பாண்ட உற்பத்திகள், சிற்பங்கள் மற்றும் பாதணிகள் என பல்வேறு உற்பத்திப்பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்படவுள்ளன.

இக் கண்காட்சியை இலவசமாகப் பார்வையிட முடியும் என மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது. கண்காட்சி நடைபெறும் இரண்டு நாட்களும் இரவு வேளைகளில் இசை நிகழ்ச்சியும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

பெரும்போக நெல் கொள்வனவு ஆரம்பம்

கையடக்க தொலைபேசியை பயன்படுத்தி பரீட்சை எழுதிய மாணவர் கைது

வேட்புமனுவில் கையொப்பமிட்டார் பிரதமர் [VIDEO]