விளையாட்டு

‘சிரேஷ்ட தேசிய ஹொக்கி சாம்பியன்ஷிப்’ பட்டத்தை வென்றுள்ள பாதுகாப்பு சேவைகள் ஹொக்கி அணி

(UTV|COLOMBO)-ஹொக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் பாதுகாப்பு சேவைகள் ஹொக்கி அணியின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் ‘சிரேஷ்ட தேசிய ஹொக்கி சம்பியன்ஷிப்’ பட்டத்தை வென்றுள்ளனர்.

கொழும்பு ஹொக்கி மைதானத்தில் அண்மையில் இந்த போட்டி இடம்பெற்றது.

 

சம்பியன்ஷிப் பட்டத்துக்கான இறுதிச்சுற்றுப் போட்டிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவுற்றதுடன், பாதுகாப்பு சேவைகள் ஆண்கள் ஹொக்கி அணியினர் அரச சேவைகள் ஹொக்கி அணியினரை 5-0 என்ற புள்ளி அடிப்படையிலும், பாதுகாப்பு சேவைகள் பெண்கள் ஹொக்கி அணியினர் கொழும்பு ஹொக்கி கழகத்தை 6-0 என்ற புள்ளி அடிப்படையிலும் வெற்றியீட்டியுள்ளனர்.

 

இலங்கை விளையாட்டு அபிவிருத்தி அமைச்சினால் நடத்தப்பட்ட குறித்த போட்டி கடந்த 16ஆம் திகதி முதல் 21ஆம் திகதிவரை இடம்பெற்றதுடன், இப்போட்டியில் பதினெட்டு ஆண் மற்றும் பத்து பெண் வீர வீராங்கனைகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

தோனியை தேர்வு செய்தவர் தற்கொலை

இலங்கை கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர்களை பதவி விலகுமாறு அறிவுறுத்தல்

கிரிக்கெட் பேரவைக்கு புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர்