வகைப்படுத்தப்படாத

சிரியாவில் இரசாயன ஆயுதங்களில் பயன்படுத்தப்படும் இரசாயனங்களை வட கொரியா வழங்குவதாக தகவல்

(UTV|COLOMBO)-சிரியாவில் இரசாயன ஆயுதங்களில் பயன்படுத்தப்படும் இரசாயனங்களை வட கொரியா அனுப்பி வருவதாக, ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்களின் தகவல்களை மேற்கோள்காட்டி அமெரிக்க ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

எசிட் எதிர்ப்பு உபகரணங்கள் மற்றும் குழாய்களும் இவ்வாறு வடகொரியாவில் இருந்து அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை வடகொரியாவின் அணுவாயுத தயாரிப்பு நிபுணர்கள் சிலரை சிரியா ஆயுத தயாரிப்பு தளங்களில் காணக்கிடைத்ததாக நியூயோர்க் டைம்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது.

சிரியா அரசாங்க படையினரால் தாக்குதல்களின் போது குளோரின் வாயு பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் வௌியானதை தொடர்ந்து அமெரிக்க ஊடகங்களில் இது தொடர்பான செய்திகள் வௌியாகியுள்ளன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

විදේශ රටවලින් කජු ආනයනය නතර කිරීමට පියවර

Approval to distribute tablet computers granted only as pilot project – PMD

இந்தோனேசியாவில் 6.2 ரிக்டர் அளவில் நில நடுக்கம்