உள்நாடு

சிங்கள மொழிக்கு உள்ள அதிகாரம், தமிழ் மொழிக்கும் உண்டு

(UTV | COLOMBO) – சுதந்திர தினத்தன்று சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என அரசு கூறுமாயின் வடக்கு கிழக்கு மக்கள் அன்றைய நாளினை தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்க நிர்ப்பந்திக்கப்படுவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

மேலும், தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாட முடியாது என்ற அறிவிப்பைத் நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தெரிவித்துள்ளது.

இலங்கையில் சிங்கள மொழி எவ்வாறு அரசகரும மொழியாகக் காணப்படுகின்றதோ, அதேபோன்று தமிழ் மொழியும் அரசகரும மொழியாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சிங்கள மொழிக்கு உள்ள அதிகாரம், தமிழ் மொழிக்கும் காணப்படுகின்றமையால், அதனை யாரும் தடுத்து நிறுத்தி விட இடமளிக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

Related posts

ஈஸ்டர் தாக்குதல் நடந்து 04 ஆண்டுகள் – மௌன அஞ்சலி

மத்திய வங்கி அதிகாரிகளை ஜனாதிபதி கண்டித்தமை தொடர்பில் மங்கள கேள்வி

கடும் மழை – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை