உள்நாடு

சிக்கலான புதிய திரிபுகளை அடையாளம் காண DNA பரிசோதனை

(UTV | கொழும்பு) –   கொவிட் 19 வைரஸின் புதிய திரிபுகளை அடையாளம் காண்பதற்காக பயன்படுத்தப்படும் மரபணு பரிசோதனை செயல்முறை குறித்து சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளரும், சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகமுமான வைத்தியர் ஹேமந்த ஹேரத் இன்று (20) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டார்.

மரபணு பரிசோதனையானது, வைரஸின் புதிய திரிபுகளை அடையாளம் காண்பதற்கு சுகாதாரத் துறையால் முன்னெடுக்கப்படும் ஒரு அணுகுமுறையாகும் என்று சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த செயற்பாட்டினால், நாட்டில் கொவிட் 19 வைரஸின் அல்பா, டெல்டா மற்றும் ஒமைக்ரொன் ஆகியவற்றின் புதிய திரிபுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

எதிர்காலத்தில் இந்த விஞ்ஞான முறையானது நோயாளர்களை அடையாளம் காண, புதிய திரிபு வகைகளை கண்டறியவும் தொடர்ந்தும் பயன்படுத்தப்படும் என சுகாதார ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஒமைக்ரொன் வைரஸால் பாதிக்கப்பட்ட நால்வருக்கும் எவ்வாறு வைரஸ் தொற்று ஏற்பட்டது, அவர்களுடன் தொடர்புடையவர்கள் யார் என்பது தொடர்பில், சுகாதார பிரிவினரால் ஆராயப்பட்டு வருவதாக வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

மேலும், சுகாதார அமைச்சு இந்த நீண்ட மற்றும் தீவிரமான செயல்முறையை தனியாளாக மேற்கொள்வது கடினம் என்றும், இதற்காக பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற சுகாதார நிறுவனங்களின் முழு ஆதரவு தேவை என்றும் அவர் கூறினார்.

Related posts

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு திரும்பியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு கடன்

‘MT New Diamond’ – அவசரமாக வெளியேற்றப்பட வேண்டும்