உள்நாடு

சிகிச்சைப் பெற்று குணமடைந்த நபர் ஒருவருக்கு மீண்டும் கொரோனா

(UTV | கொவிட் – 19) -ஜா எல சுது வெல்ல பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் தேசிய தொற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று குணமடைந்த நபர் ஒருவருக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக ஜா எல சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டதையடுத்து கடந்த மார்ச் மாதம் வைத்தியசலையில் அனுமதிக்கப்ப்ட குறித்த நபர் கடந்த ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் தனது வீட்டில் சுயதனிமைப்படுத்தலில் ஈடுபட்டிருந்த குறித்த நபர் இருதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக சிகிச்சை பெறுவதற்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த நபருக்கு பீசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனைனயடுத்து குறித்த நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து மேலதிக சிகிச்சைகளுக்காக தேசிய தொற்று நோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தேர்தல் தொடர்பில் பேச்சுவார்த்தை நடைபெறும் – பசில்

போதைபொருள் தடுப்பு நோக்கில் நீதி துறையுடன் இணைந்த நிகழ்வு

சர்ச்சைக்குரிய தேங்காய் எண்ணெய் அடங்கிய கொள்கலன்கள் மீள் ஏற்றுமதி