உள்நாடு

சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் வைத்தியசாலையில் துஷ்பிரயோகம் – ஒருவர் கைது

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் மனநோயாளர் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 37 வயது பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வைத்தியசாலை தரப்பினர் வழங்கிய தகவலின் அடிப்படையில், தெல்லிப்பளை பொலிஸாரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வைத்தியசாலையில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டு வந்த 36 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதேநேரம், பாதிக்கப்பட்ட பெண் வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

-பிரதீபன்

Related posts

பலவந்தமாக எரிக்கப்பட்ட ஜனாஸாக்கள் – பிரார்த்தனை செய்யும் நினைவு தின நிகழ்வில் சஜித் பங்கேற்பு

editor

மன்னார் துப்பாக்கிச் சூடு – முழுப் பொறுப்பையும் மன்னார் பொலிஸார் ஏற்க வேண்டும் – செல்வம் அடைக்கலநாதன் எம்.பி

editor

எதிர்க்கட்சியில் உள்ள முஸ்லிம் எம்.பி க்களை சந்தித்த தேசிய ஷூரா சபை

editor