வகைப்படுத்தப்படாத

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலி

(UTV|INDIA)-குஜராத் மாநிலம், மோர்பி மாவட்டத்தில் அமைந்துள்ள ராஜ்கோட்-மோர்பி தேசிய நெடுஞ்சாலையில் தங்காரா எனும் பகுதியில் எதிரே வந்த லாரியின் மீது சொகுசு கார் மோதி விபத்தில் சிக்கியது. இதனால் பற்றிய தீ வேகமாக கார் முழுதும் பரவியது.

இதில், காரில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

Shreya and Sonu come together for love song

கிராம அலுவலர்களுக்கான கொடுப்பனவில் மாற்றம்!

Twenty five year old sentenced to death over drugs