வகைப்படுத்தப்படாத

‘சார்க்’ மாநாட்டில் இந்தியா பங்கேற்காது

(UTV|INDIA)-பாகிஸ்தான் நாட்டில் நடைபெறும் தெற்காசிய கூட்டமைப்பு மாநாட்டில் இந்தியா பங்கேற்காது என வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று(28) அறிவித்துள்ளார்.

‘சார்க்’ என்று சுருக்கமாக அழைக்கப்படும் தெற்காசிய கூட்டமைப்பு மாநாட்டை 02 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு உறுப்பு நாடு பொறுப்பேற்று நடத்தும். அதன்படி இந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ள சார்க் மாநாட்டில் கலந்து கொள்ளும்படி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு அனுப்பப்படும் என்று பாகிஸ்தான் வெளியுறவு செய்தி தொடர்பாளர் முகம்மது பைசல் நேற்று(27) தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

தொழில் திணைக்களத்தில் பணிகள் மீண்டும் வழமைக்கு

ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசில் நிதியை அதிகரிக்க நடவடிக்கை

க.பொ.உயர்தர பரீட்சைக்கான அனுமதி அட்டைகள்