உள்நாடு

சாரதி அனுமதிப்பத்திரம் – மேலும் 3 மாத கால அவகாசம்

(UTV|கொழும்பு) – சாரதி அனுமதிப்பத்திர உரிமங்களுக்கு மேலும் 3 மாத கால அவகாசம் வழங்குவதற்கு போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தீர்மானித்துள்ளது.

ஜூலை முதலாம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திர உரிமங்களுக்கு மேலும் 3 மாத கால அவகாசம் வழங்குவதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளது.

நாட்டில் நிலவும் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டும், ஆணைக்குழுவுக்கு நாளாந்தம் அதிகளவான மக்கள் வருகைத் தருவதன் காரணமாகவும் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு குறித்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

2021ஆம் ஆண்டுக்கான அரச விடுமுறைகள்

தொடர்ந்தும் வலுக்கும் கொரோனா

இலங்கை தமிழரசு கட்சி சஜித்திற்கு ஆதரவு.

editor