உள்நாடு

சாரதி அனுமதிப்பத்திர வைத்திய சான்றுகள் பெறும் முறையில் மாற்றம்

(UTV|COLOMBO) – சாரதி அனுமதிப்பத்திரங்களை பெறுவதற்கான வைத்திய சான்றிதழ்களை, அரச வைத்தியசாலைகள் ஊடாக விநியோகிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக, போக்குவரத்து சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

மேட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்துக்கு ஜனாதிபதி அண்மையில்,திடீர் விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது, பொதுமக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டன.

இதற்குத் தீர்வாக, இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

பட்டதாரிகளுக்கான முக்கிய அறிவிப்பு !

அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு வீட்டுரிமைப் பத்திரம்!

சஜித் பிரதமர் பதவியை ஏற்கத் தயாராக இருந்தால் ஆதரவளிக்க நாம் தயார்