உள்நாடுசூடான செய்திகள் 1

சாரதி அனுமதிப்பத்திர செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

(UTVNEWS | கொவிட் – 19) – சாரதி அனுமதிப்பத்திர காலாவதி திகதி கொரோனா தொற்று நிலைமை சீராகும் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை அடுத்து, போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகள் முடக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் (16) திகதி சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்குதல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படுவதாக, மோட்டார் வாகன  திணைக்களம் அறிவித்திருந்தது.

Related posts

சுற்றுலா பயணிகளுக்கான முக்கிய அறிவுறுத்தல்!!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான இறுதி அறிக்கை நாளை

இ.தே.தோ.தொ.சங்கத்தின் சொத்துக்களை கையாள ஹரின் – வடிவேலுக்கு தடை