உள்நாடு

சாரதி அனுமதிப் பத்திரங்களில் புதிய மாற்றம்

(UTV|கொழும்பு)- வாகன சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கு புள்ளிகள் வழங்கும் முறைமையை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய சாரதி அனுமதி பத்திரம் ஒன்றிற்கு 0 முதல் 24 புள்ளிகள் வழங்கப்படும்

இதன் பின்னர் சாரதியின் கவனயீனம் காரணமாக இடம்பெறும் ஒவ்வொரு விபத்துக்கும் 24 இல் இருந்து புள்ளிகள் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதியாக புள்ளிகள் பூச்சியத்தை அடைந்த பின்னர் சாரதி அனுமதிப்பத்திரத்தினை இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாரதிகளின் கவனக்குறைவால் ஏற்படும் விபத்துக்களை தவிர்ப்பதற்கான வழி முறையாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

இலங்கையின் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரின் சேவைக்காலம் நிறைவு

‘சைனோபாம்’ : 10 இலட்சம் தடுப்பூசிகள் இலங்கைக்கு

மேலும் 61 பேருக்கு கொரோனா