உள்நாடுசூடான செய்திகள் 1

சாய்ந்தமருது பள்ளிவாசலின் படத்தினை தனிநபர் பயன்படுத்துவது தடை!

(UTV | கொழும்பு) –  சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் முகப்புத் தோற்றத்தினை (பள்ளிவாசலின் படம்) எக்காரணம் கொண்டும் தனிநபர் யாரும் பயன்படுத்துவது பள்ளிவாசல் நிர்வாகத்தினால் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அண்மைக்காலத்தில் பள்ளிவாசலின் படத்தைப் போட்டு சட்டத்திற்கு முரணான முறையில் தனிநபர் ஒருவரால் முகப்புத்தகத்தில் (Facebook) பயன்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் படத்தினை பெரிய பள்ளிவாசலின் அனுமதி இல்லாமல் தனிநபர் யாரும் பயன்படுத்தக் கூடாது என்றும் அவ்வாறு மீறி பயன்படுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரொஷானுக்கு எதிராக கிரிக்கெட் நிறுவனம் வழக்கு தாக்கல்!

கேரளா கஞ்சாவுடன் இளைஞர் கைது

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் இன்று