உள்நாடு

சாதாரணதர பரீட்சை தினம் குறித்து மீள் பரிசீலனை

(UTV | கொழும்பு) –  2020 ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை நடைபெறும் தினம் குறித்து மீள் பரிசீலனை மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை பரீட்சை நடைபெறும் என நாம் அறிவித்திருந்தோம் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தற்பொழுது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் தொடர்பில் பிரச்சினைகள் உண்டு. இதேபோன்று தரம் 10 தொடக்கம் 11 வரை வகுப்புக்கள் உள்ள பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான தீர்மானங்களை 2 வார காலத்துக்குள் மேற்கொள்வோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர் தரம் 10 தொடக்கம் 11 வரை வகுப்புக்களை ஆரம்பிக்க முடியாதாயின், மீண்டும் இது தொடர்பில் கவனத்தில் கொள்ளப்படும் எனவும் அதன் அடிப்படையில் கல்வி பொது தராதர சாதாரணதர பரீட்சையை குறித்த இந்த பாடசாலைகளில் நடத்த முடியுமா? என்ற தீர்மானம் 2 வார காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்படும் எனவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் அடிப்படையில் க.பொ.த சாதாரணதர பரீட்சையை குறித்த தினத்தில் நடத்துவதா? இல்லையா, என்பது குறித்தும் மீள் பரிசீலனை மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொழும்பிலிருந்து அக்கரைப்பற்றை நோக்கி சென்ற அதிசொகுசு பஸ் கட்டுப்பாட்டை இழந்து விபத்து..! நால்வர் காயம்…

கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் உயிரிழப்பு

நாட்டின் சகல பிரஜைகளும் சுதந்திர புருஷராக மதிக்கப்பட வேண்டும்