சூடான செய்திகள் 1

சாதாரண மற்றும் உயர்தரப் பரீட்சைகளுக்கு வெளிநாடுகளிலிருந்தும் தோற்றலாம்?

(UTV|COLOMBO)  வெளிநாட்டிலிருக்கும் இலங்கைப் பிள்ளைகளுக்குக் கல்வி பொதுதராதர சாதாரணதரப் பரீட்சை, உயர்தரப் பரீட்சை ஆகியவற்றை எழுதுவதற்கான வாய்ப்பை வழங்கத் தீர்மானித்துள்ளதாகக் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளா​ர்.

இதற்கான பொறிமுறையை உருவாக்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், பரீட்சைகள் திணைக்களத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி அவர்கள் வசிக்கின்ற நாடுகளில் உள்ள இலங்கையின் ராஜதந்திர அலுவலகத்தில் இந்த பரீட்சைகளுக்கு தோற்றுவதற்கான ஏற்பாட்டை மேற்கொள்ள தாம் அறிவுறுத்தி இருப்பதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Related posts

தெமட்டகொடையில் தொடர் குடியிருப்புகளில் தீப்பரவல்

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் வழங்கப்பட்ட பானகமுவ புதிய மக்தப் கட்டிட வேலைகளை துரிதப்படுத்தவும்

எந்த மாற்றம் செய்தாலும் நாட்டை கட்டியெழுப்ப இந்த அரசாங்கத்தால் முடியாது