வகைப்படுத்தப்படாத

சாதாரண தரப் பரீட்சையில் ஆள்மாராட்டம்: ஒருவர் கைது

(UTV|COLOMBO)-இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரிட்சையில் ஆள்மாராட்டம் செய்ய வந்ததாக கூறப்படும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பிலியந்தலை பகுதி பாடசாலை ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேகநபர் சம்பந்தப்பட்ட மாணவரின் அடையாள அட்டையில் இருந்த புகைப்படத்துக்கு மேலாக தனது புகைப்படத்தை ஒட்டி, அதனை லெமினேட் செய்து, பரீட்சை மண்டபத்தில் சமர்ப்பித்துள்ளார்.

குறித்த இரு மாணவர்களும் நண்பர்கள் எனத் தெரியவந்துள்ளது.

இதேவேளை, இம்முறை பரீட்சையில் ஏனைய சில பாடங்களுக்கும் குறித்த அடையாள அட்டை பயன்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், பிரதமர் மோடி இடையே இன்று சந்திப்பு

A/L Examination on Aug. 05

Sri Lanka launches new official map featuring Chinese investments