சூடான செய்திகள் 1

சாதாரண தர பரீட்சையில்- மேலும் இரண்டு மாணவர்கள் கைது…

(UTV|COLOMBO)-கல்விப்பொதுத் தராதர சாதாரண தர கணிதப்பரீட்சையில் பரிட்சார்த்திக்கு பதிலாக தோற்றிய மேலும் இரண்டு சந்தேகநபர்கள் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனமல்வில – போதாகம பிரதேசத்தின் பரீட்சை மத்தியநிலையத்தில் மற்றும் கல்முனை – சாய்ந்தமருது பிரதேசத்தின் பரீட்சை மத்திய நிலையத்தில் இந்த சந்தேகநபர்கள் பரீட்சைக்கு தோற்றியுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் மாத்தறை – திஹகொட பிரதேசத்தின் பரீட்சை மத்திய நிலையமொன்றில் நேற்று இடம்பெற்ற கணித பரீட்சையில் பரீட்சார்த்திக்கு பதிலாக தோற்றிய அவரது நண்பர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அதிவிசேட வர்த்தமானி

editor

பலஸ்தீன் பிரஜை ஒருவர் மீண்டும் நாடுகடத்தப்பட்டார்

வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு கட்டாய வரி