விளையாட்டு

சாதனை படைத்த சமரி அத்தபத்து.

ஆசியக் கிண்ண மகளிர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கும், மலேசிய அணிக்கும் இடையிலான போட்டி தற்போது தம்புள்ளையில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 184 ஓட்டங்களைப் பெற்றது.

அந்தப் போட்டியில் இலங்கை அணியின் தலைவி சமரி அத்தபத்து ஆட்டமிழக்காமல் 119 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

14 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சர்கள் அடங்கலாகவே சமரி அத்தபத்து  119 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

ஆசிய கிண்ண மகளிர் டி20 போட்டியில் பெறப்பட்ட முதல் சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தென் ஆப்பிரிக்கா பயிற்சியாளர் பதவியில் இருந்து Mark Boucher இராஜினாமா

LPL போட்டித் தொடருக்கான அட்டவணை வெளியீடு

SL vs ENG – நாணய சுழற்சியில் இலங்கைக்கு வெற்றி | நேரடி ஒளிபரப்பு