உள்நாடு

சவூதி பேரீச்சம்பழங்கள் இம்முறையே நியாயமாகப் பகிரப்பட்டது – அமைச்சர் ஹினிதும சுனில் செனவி

சவூதி அரசாங்கத்தினால் ரமழான் நோன்பிற்காக இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 50 தொன் பேரீச்சம் பழங்கள் முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் 2 ஆயிரம் பள்ளிவாசல்களுக்கு இம்முறை மிகவும் நியாயமாகப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் (கலாநிதி) ஹினிதும சுனில் செனவி இதனைத் தெரிவித்தார்.

பத்தாவது பாராளுமன்றத்தின் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் கடந்த சனிக்கிழமை (08) அமைச்சரின் தலைமையில் கூடியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதற்கு முன்னர் பேரீச்சம்பழங்களைப் பகிர்ந்தளிக்கும் போது மோசடிகள் இடம்பெற்றதாகத் தனக்கு முறையிடப்பட்டிருப்பதாக அவர் இதன்போது சுட்டிக் காட்டினார்.

வரலாற்றில் முதல் தடவையாக நியாயமான, வெளிப்படையான முறையில் இந்தப் பகிர்ந்தளிப்பை மேற்கொள்ள முடிந்திருப்பதாக அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.

இக்கூட்டத்தில் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Related posts

டைல்ஸ் இறக்குமதி நிபந்தனைகளுக்கு உட்பட்டு அனுமதி

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை ஜனாதிபதி இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்!

பிரதமர் தினேஷ் குணவர்தன இராஜினாமா

editor