உள்நாடு

சவூதி இளவரசர் ஜனாதிபதி ரணிலிடமிருந்து எழுத்துமூல செய்தியைப் பெற்றுக் கொண்டார்

(UTV | கொழும்பு) –   சவூதி அரேபியாவின் பிரதிப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான பட்டத்து இளவரசர் மொஹமட் பின் சல்மான், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து ஞாயிற்றுக்கிழமை (28) எழுத்துமூல செய்தியைப் பெற்றதாக அஷ்ஷர்க் அல் அவ்சாத் செய்தி வெளியிட்டுள்ளார்.

சவுதி பிரஸ் ஏஜென்சியை மேற்கோள் காட்டி, இந்த செய்தி இரு நட்பு நாடுகளையும் மக்களையும் இணைக்கும் இருதரப்பு உறவுகளை கையாள்வதாகவும், அவற்றை அனைத்து துறைகளிலும் மேம்படுத்துவதற்கான வழிமுறைகளையும் கூறியது.

இலங்கை ஜனாதிபதியின் விசேட தூதுவர், இலங்கையின் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் உடனான சந்திப்பின் போது, வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் பின் அப்துல்லாவின் சார்பாக பிரதி வெளிவிவகார அமைச்சர் வலீத் பின் அப்துல்கரீம் அல்-குரைஜி இந்தச் செய்தியைப் பெற்றுக்கொண்டார்.

சவூதி அரேபியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் பல்வேறு துறைகளில் அவற்றை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து அவர்களது சந்திப்பில் பேசப்பட்டது.

Related posts

இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு.

எரிபொருள் விலை சூத்திரம் நடைமுறையில் இருந்தால் எரிபொருள் விலை 20 ரூபாவினால் குறைந்திருக்கும்

20 பவுண் நகைகளை திட்டமிட்டு களவாடிய 3 சந்தேக நபர்கள் கைது