வளைகுடா

சவுதி மீது ஏமன் கிளர்ச்சியாளர்கள் மீண்டும் ஏவுகணை தாக்குதல்

(UTV|COLOMBO)-ஏமனில் கடந்த 3 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அங்கு அரசுக்கு எதிராக போராடி வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபிய கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இத்தகைய நடவடிக்கைகளால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்தள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மீது ஏற்கனவே 2 தடவை ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு மீண்டும் எவுகணை வீசி தாக்குதல் நடத்தினார்கள்.

சவுதிஅரேபிய தலைநகர் ரியாத்தில் உள்ள முக்கிய விமான நிலையத்தை குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் இந்த ஏவுகணையை சவுதிஅரேபிய ராணுவம் இடைமறித்து தாக்கி வெற்றிகரமாக அழித்தது. இத்தகவலை சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.

ஏமனில் சவுதி அரேபிய கூட்டுப்படைகளின் நடவடிக்கை தொடங்கி 3 ஆண்டுகள் அகிறது. அதை குறிக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது. இதற்கிடையே சவுதி அரேபியா மீது தொடர்ந்து இத்தகைய ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்படும் என ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இந்திய பெண்ணை கரம் பிடிக்கும் ஹசன் அலி (photo)

எகிப்து அதிபராக அப்துல் சிசி மீண்டும் தேர்வு

‘உலக ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் தினம்’ சவூதி அரேபியாவின் முன்மாதிரியான திட்டம்