உலகம்

சவுதி அரேபியாவில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 65 ஆயிரத்தை கடந்தது

(UTV|கொழும்பு)- சவுதி அரேபியாவில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அந்நாட்டின் சுகாதார துறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த பல நாடுகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 2,532 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 65,077 ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நாளில்12 பேர் பலியானதை அடுத்து, அங்கு பலி எண்ணிக்கை 351 ஆக உயர்ந்துள்ளது என அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்துள்ளது.

Related posts

வீதியை விட்டு விலகி நீர்த்தேக்கத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளான பேரூந்து

ரஷ்யாவுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை

இந்தியாவில் 40 இலட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு