கேளிக்கை

சறுக்கினார் பிரியா

(UTV |  இந்தியா) – 2018ம் ஆண்டு வெளியான ‘ஒரு அடார் லவ்’ என்கிற மலையாள திரைப்படத்தின் ‘மாணிக்ய மலரே பூவி’ என்ற பாடலில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரியா வாரியர்.

அந்தப் பாடலில் அவரது கண் சிமிட்டல் காட்சி பலரையும் ஈர்த்தது. அதன் மூலம் ஏராளமான ரசிகர்களையும் பெற்றார் பிரியா.

அதைத்தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் இவர் தற்போது நிதின் உடன் ‘செக்’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இத்திரைப்படத்தின் பாடல் காட்சி படமாக்கப்பட்டு கொண்டிருக்கும் போது ஓடிவந்து நடிகர் நிதினின் முதுகில் ஏறுவதற்கு பதிலாக தவறி கீழே விழுந்துள்ளார் பிரியா வாரியர்.

உடனே அங்கிருந்த நபர்கள் ஓடி வந்து பிரியாவுக்கு உதவினர். தான் ஷூட்டிங் ஸ்பாட்டில் தவறி கீழே விழுந்த வீடியோவை பிரியா வாரியர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதைப்பார்த்த அவரது ரசிகர்கள் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையுடனும் பணியாற்றுமாறு பிரியாவுக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.

Related posts

மீண்டும் காதல் வலையில் திரிஷா?

அதிக முறை 100 கோடி வசூல் செய்த நடிகர்கள் யார் என்று தெரியுமா?

‘சக்ரா’வுக்கு தடை