சூடான செய்திகள் 1

சர்வதேச யோகா தினம் இன்று

(UTV|JAFFNA)-யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச யோகா தினம் இன்று (21) யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வு இன்று காலை யாழ். வேம்படி மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது.

இந்திய துணை தூதுவரின் உயர்ஸ்தானிகர் சங்கர் பாலச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வட மாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.

பாடசாலை மாணவர்களிற்கு இங்கு விசேட யோகா கலை பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இப்பயிற்சியை இந்திய துணை தூதரகத்தின் யோகா ஆசிரியர் சூரியகுமார் இணைந்து வழங்கினார்.

இந்நிகழ்வில், வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், யாழ். வேம்படி மகளிர் கல்லூரி உப அதிபர் மேனகா கிருஷ்ணபிள்ளை மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட இந்திய துணை தூதரக அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த உதவுங்கள்

வியானா ஓடை விபத்துக்களை கட்டுப்படுத்த ஜனாதிபதி ஆலோசனை

தொடரூந்து சேவையில் காலதாமதம்