வகைப்படுத்தப்படாத

சர்வதேச நீதிபதிகளை அழைக்கும் ஒரே நாடாக இலங்கை – மகிந்த குற்றச்சாட்டு

(UDHAYAM, COLOMBO) – யுத்த குற்றங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள சர்வதேச நீதிபதிகளை அழைக்கும் ஒரே நாடாக இலங்கை உள்ளதாக மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொரளையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வென்றில் அவர் இதனை தெரிவித்தார்.

இலங்கையின் தலைவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.

சர்வதேசத்திற்கு நாட்டை காட்டிக் கொடுக்கும் செயற்பாடுகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஜெனீவா சென்றுள்ள அமைச்சர்கள், இலங்கையில் யுத்தக்குற்றங்கள் இடம்பெற்றிருப்பதாகவும், அது குறித்து ஆராயுமாறும் சர்வதேசத்திடம் கோருகிறார்.

எனினும், ஜனாதிபதியும் பிரதமரும் சர்வதேச விசாரணைக்கு இடமில்லை என கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், உள்நாட்டு யுத்தம் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு கோரும் ஒரே நாடாக இலங்கை உள்ளதாக மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் விசாரணை மேற்கொள்வதாயின் வெளிநாட்டு நீதிபதிகள் தேவையில்லை என்றும், உள்நாட்டு நீதிபதிகளே போதுமானவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

ஏவுகணை சோதனை மையம் அழிப்பு

மண்சரிவு காரணமாக பழைய அவிசாவளை வீதியின் ஒருபகுதி மூடப்பட்டுள்ளது