உள்நாடுசூடான செய்திகள் 1

IMF ஒப்பந்தத்தை எதிர்க்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்!

(UTV | கொழும்பு) –

 சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்துள்ள ஒப்பந்தத்தை எதிர்க்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்ற கட்சியின் குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடனான தன்னிச்சையான கொடுக்கல் வாங்கல்களினால் அரசாங்கம் கொண்டு வந்த சகல பிரேரணைகளுக்கும் நிபந்தனையின்றி உடன்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கட்சிக் குழுக் கூட்டத்தில் பேசப்பட்டது. அங்கு பேசிய எம்.பி.க்கள், சர்வதேச நாணய நிதியத்துடனான கொடுக்கல் வாங்கல் வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், நாட்டுக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கி சாதனைகள் படைக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்துள்ள ஒப்பந்தம் பாதகமான நிபந்தனைகளுடன் கைச்சாத்திடப்பட்டு அந்த உடன்படிக்கை நாட்டுக்கு முன்வைக்கப்படாததன் அடிப்படையில் எதிர்கட்சி ஏகமனதாக அதனை எதிர்ப்பதற்கு தீர்மானித்தது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்போருக்கு விஷேட அறிவுறுத்தல்

ஊடகத்துறைக்கு புதிய பதில் அமைச்சர்!

வாக்களிப்பு நேரத்தை ஒரு மணி நேரத்திற்கு நீடிக்க தீர்மானம்