சூடான செய்திகள் 1

சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் இலங்கையில்

(UTV|COLOMBO) சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நேற்று கொழும்பு வந்துள்ளார்கள்.

இலங்கைக்கு 260 மில்லியன் ரூபா கடனை தவணைக் கொடுப்பனவாக வழங்குவது குறித்து கலந்துரையாடவென சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இங்கு வந்துள்ளனர்.

இலங்கை மத்திய வங்கி திறைசேரி, நிதியமைச்சு என்பனவற்றின் அதிகாரிகளுடன் இவர்கள் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார்கள்.

உலக வங்கியின் 5ஆவது தவணைக் கொடுப்பனவு கடந்த வருடம் நவம்பர் மாதம் இலங்கைக்கு வழங்கப்பட இருந்தது.

அரசியல் நெருக்கடியினால் இந்த நிதி இலங்கைக்கு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அரச தகவல் திணைக்களம்

 

 

 

 

Related posts

இரு மாடி கட்டிடத்தில் இன்று காலை தீ பரவல்

களனி பல்கலைக்கழக கத்திக்குத்து தாக்குதல் – மாணவன் விளக்கமறியலில்

நோர்வே வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்கு