உள்நாடுசூடான செய்திகள் 1

சமூர்த்தி பயனாளிகளுக்கு நிவாரண உதவி

(UTVNEWS | COLOMBO) -சமூர்த்தி பயனாளிகளுக்கு ஐந்தாயிரம் ரூபா வீதம் இரண்டு தவணைககளில் நிவாரண உதவிகள் வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரச ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,10 இலட்சத்திற்கும் குறைவான வங்கிக் கடன் பெற்ற அரச பணியாளர்களின் மாதந்த கடன் அறவீடுகளை ஏப்ரல் மே மாதங்களில் அறவிடாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

20 இலட்சம் சமூர்த்தி பயனாளிகள் இதன் மூலம் நன்மையடைவார்கள் எனரும் அமைச்சர் பந்துல குணவர்தன கூறினார்.

Related posts

ரணவிரு ரியல் ஸ்டார் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு புதிய வீடுகள்

மஹிந்தவுக்கு முன், கோட்டபாயவை கடுமையாக தாக்கி பேசிய தேரர்

காவற்துறை அதிகாரிகள் இருவர் பணி நீக்கம்…