உள்நாடு

சமன் லால் பெர்னாண்டோவுக்கு விளக்கமறியல்

(UTV | கொழும்பு) – மொரட்டுவ நகரசபை ​மேயர் சமன் லால் பெர்னாண்டோவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூன் மாதம் 11 ஆம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அவர் இன்று கல்கிசை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

மொரட்டுமுல்ல பகுதியில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையின் போது, வைத்தியர் ஒருவரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐக்கிய மக்கள் சக்தியின் ரஞ்சனுக்கு புதிய பதவி

முதலாம் தவணை பரீட்சைகளுக்கு தடை

இருநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 304 இலங்கையர்கள்