அரசியல்உள்நாடு

சப்ரகமுவ மாகாண சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச மகளிர் தின விழா!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சப்ரகமுவ மாகாண சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச மகளிர் தின விழா கடந்த வெள்ளிக்கிழமை (07) கேகாலை பஸ்னாகல மகா வித்தியாலயத்தில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தலைமையில் நடைபெற்றது.

தெரணியகல பிரதேச சபையும், தெரணியகல பிரதேச செயலகமும் இதற்கு முழுமையான பங்களிப்பை வழங்கியிருந்தன.

மேற்படி பஸ்னாகல மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற மகளிர் தின நிகழ்வில்
தொற்றா நோய் மற்றும் சுகாதாரம், பல் மற்றும் ஆயுர்வேத மருத்துவ முகாம்களும் இடமைபெற்றன.

அழகுக்கலை மாணவர்களுக்கு உதவித்தொகை, மகளிர்களால் தயாரிப்புக்கப்பட்ட பொருட்கள் விற்பனை கடைகள், பாடசாலை நூலகங்களுக்கு நூல்கள் வழங்கி வைப்பு, மாணவர்கள் மற்றும் பெண்களுக்கு உதவித்தொகை மானியம் என்பன வழங்கி வைக்கப்பட்டன.

மற்றும் அளகு கேக் பயிற்சி பட்டறைகள், குழந்தைகள் துஷ்பிரயோகம் தடுப்பு, போதைப்பொருள் தடுப்பு, பெண்களுக்கு சட்டப் பாதுகாப்பு வழங்குதல் போன்றவையும் இங்கு இடம்பெற்றன.

அத்துடன் பிறப்பு, திருமணம், இறப்பு சான்றிதழ்கள், தேசிய அடையாள அட்டைகள், முதியோர் அடையாள அட்டைகள், ஊனமுற்றோர் வாழ்வாதார கொடுப்பனவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆலோசனை சேவைகள் மற்றும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான ஆலோசனை சேவைகளை வழங்குதல் தொடர்பான செயற்பாடுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இலங்கை வங்கி, மக்கள் வங்கி, பிராந்திய அபிவிருத்தி வங்கி, சனச அபிவிருத்தி வங்கி என்பன பரிசளிப்பு நிகழ்விற்கு பங்களிப்பு வழங்கி இருந்தன.

இந்நிகழ்வில் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் ஜயவீர, சப்ரகமுவ மாகாண பிரதான அமைச்சின் செயலாளர் சுஜீவா போதிமான்ன, கேகாலை மாவட்ட செயலகத்தின் மேலதிக செயலாளர் குசுமா பண்டார, தெரணியகல பிரதேச சபையின் செயலாளர் நளீன் புஷ்ப குமார ஆகியோர் கலந்துகொண்டனர்.

சிவா ஸ்ரீதரராவ் இரத்தினபுரி

Related posts

ஓய்வூதியதாரர்களுக்கான அறிவித்தல்

விபத்தில் சிக்கிய பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியசாலையில் அனுமதி

editor

ஹரின் மீண்டும் UNP இல் இணைகிறார்