உள்நாடு

சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் மூடப்படும் சாத்தியம்

(UTV | கொழும்பு) –  கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் ஒரு வாரத்திற்குள் மூடப்படும் அபாயம் உள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது நடந்தால் எண்ணெய் சுத்திகரிப்பு பணிகள் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்து நாடு எதிர்நோக்கும் எரிபொருள் நெருக்கடி மேலும் மோசமடையும் என உள்ளக வட்டாரங்கள் எச்சரிக்கின்றன.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அவ்வப்போது மூடப்படுவதால் அதன் உயிர்ச்சக்திக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கை கடற்பரப்பில் கச்சா எண்ணெய் தாங்கி ஒன்று நங்கூரமிட்டு பல நாட்களாகியுள்ளதாகவும் அதனை கொள்வனவு செய்யாவிட்டால் நிலைமை மோசமாகும் எனவும் எண்ணெய் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கின்றன.

இது குறித்து எரிசக்தி அமைச்சக வட்டாரத் தகவல்கள்படி, ​​சுத்திகரிப்பு நடவடிக்கைக்கான கச்சா எண்ணெயை விரைவாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமானது நாளொன்றுக்கு 350 மெற்றிக் தொன் பெட்ரோல், 750 மெற்றிக் தொன் டீசல், 1300 மெற்றிக் தொன் எரிபொருள் மற்றும் 550 மெற்றிக் தொன் மண்ணெண்ணெய் ஆகியவற்றைச் செயலாக்குகிறது.

Related posts

பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் வழமைக்கு

தோட்ட நிர்வாகத்தின் தான்தோன்றி தனமான செயற்பாடு: தொழிலாளர்களுக்கு நேரடியாக சென்று தீர்வு பெற்றுக்கொடுத்த ஜீவன்

பச்சை மிளகாய் விலை அதிகரிப்பு

editor