உள்நாடு

சபாநாயகர் விடுத்துள்ள அறிவிப்பு

(UTV|கொழும்பு) – ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு கோப் குழுவின் தலைவரை அல்லது உறுப்பினர்களை தமது அனுமதியின்றி அழைக்க முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தான தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவினால் கோப் குழுவின் முன்னாள் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி அழைக்கப்பட்டமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்

ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளமை குறித்து சுனில் ஹந்துன்நெத்தி சபாநாயகருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ள விடயம் தொடர்பில் அநுர குமார திசாநாயக்க இதன்போது சுட்டிக்காட்டினார்.

அதற்கு எழுத்துமூலம் பதிலளிப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதன்போது கூறியுள்ளார்.

Related posts

அமைச்சரவை மாற்றம் ஜனாதிபதியின் தவறான முடிவு – பொதுஜனபெரமுன

குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்கள அலுவலகத்திற்கு பூட்டு

அரிசியின் விலை குறைந்தது