அரசியல்உள்நாடு

சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல பாரபட்சமின்றி நடந்து கொள்வார் – சஜித் பிரேமதாச நம்பிக்கை

10 ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக நியமிக்கப்பட்ட கலாநிதி அசோக சபுமல் ரன்வல அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். சபாநாயகராக அவருக்கு பல முக்கிய பொறுப்புகள் காணப்படுகின்றன.

சகல பாராளுமன்ற உறுப்பினர்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவும், 225 உறுப்பினர்களும் பொது மக்கள் சேவைக்காக அவர்கள் ஆற்ற வேண்டிய சேவைகளில் தங்கள் பங்கை சரியாகச் செய்வதற்கும், புதிய சபாநாயகர் பக்கச்சார்பற்றவராகவும் வெளிப்படைத்தன்மையுடனும் கருமம் ஆற்ற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அதேபோல், புதிய சபாநாயகரின் பொறுப்பையும் கடமையையும் அரசியலமைப்பிற்கு உட்பட்டவாறு, சட்டப்பூர்வமாக நிலையியற்க் கட்டளைகளின் பிரகாரம் முன்கொண்டு செல்வதற்கு இயலுமை கிட்டட்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்

Related posts

முன்பள்ளி ஆசிரியர்களின் ஊதியப் பிரச்சினைக்குத் தீர்வு தேவை – ரவிகரன் எம்.பி வலியுறுத்து

editor

ஈஸ்டர் தாக்குதல் : அறிக்கையின் பிரதி ஒன்றை வழங்குமாறு கோரிக்கை

அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அறிவுறுத்தல்