உள்நாடு

சபாநாயகரை தோற்கடித்த தீவிரம்: அரசியல்வாதிகளின் வீட்டில் முக்கிய பேச்சு

எதிர்க்கட்சிகளும் ஆளும் தரப்பும் இந்த நாட்களில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றி கொள்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதற்கு இரகசிய பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகிறது.

இந்த கலந்துரையாடல் நான்கு முக்கிய அரசியல்வாதிகளின் வீடுகளில் இடம்பெற்றுள்ளது. ஆளுங்கட்சியின் எதிர்க்கட்சிகளின் முக்கிய குறிக்கோளாக இருப்பது வாக்கெடுப்பின்போது எம்.பி.க்களை தங்கள் பக்கம் அழைப்பதே ஆகும். மாற்றும் பல எம்.பி.க்கள் வாக்களிப்பதில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளதாகவும் அதே வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

நம்பிக்கையில்லாப் பிரேரணையின் முடிவு தமக்கு சாதகமாக அமையும் பட்சத்தில், எதிர்வரும் தேர்தலில் அதனை பிரசாரக் கருவியாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என அரசாங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் தமது பாராளுமன்ற உறுப்பினர்களை ஊக்குவித்துள்ளதாக
அறியமுடிகின்றது.

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை மீது எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் விவாதம் நடத்துவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது. நம்பிக்கையில்லாப்பிரேரணை மீதான வாக்கெடுப்பு வரும் 20ம் திகதி மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது.

Related posts

அஸ்வெசும நிவாரணத் திட்டத்தின் இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு

முதலாம் தவணை பரீட்சைகளுக்கு தடை

யாழ்.மாணவி கொலை – கணவனுக்கு விளக்கமறியல்