விளையாட்டு

சன்ரைசர்ஸ் Playoff சுற்றுக்கு தகுதி

(UTV | கொழும்பு) – ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் வெற்றி கொண்ட சன்ரைசர்ஸ் அணி ப்ளே ஓப் (Playoff) சுற்றுக்கு தகுதி பெற்றது.

மும்பை இந்தியன்ஸ் அணியுடனான நேற்றைய போட்டியில் 10 விக்கெட்களால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றியீட்டியிருந்தது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் 13 ஆவது IPL கிரிக்கெட் தொடரின் நேற்றைய 56 வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.

நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய சன்ரைசர்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது.

முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ஓட்டங்களை பெற்றது.

மும்பை இந்தியன்ஸ் அணி ஏற்கனவே Playoff சுற்றை உறுதிப்படுத்திய நிலையில் ஹர்திக் பாண்ட்யா, பும்ரா உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு நேற்றைய போட்டியில் ஓய்வளிக்கப்பட்டிருந்தது.

150 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட ஜோடியாக வோர்னர் – விருதிமன்ஷா ஜோடி களமிறங்கியது.

இறுதியாக 17.1 ஓவரில் ஹைதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி 151 ஓட்டங்களை குவித்து 10 விக்கெட்களால் வெற்றி பெற்றது.

இதன் மூலம் நேற்றைய இறுதி லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் 4 ஆவது இடத்திற்கு முன்னேறி தனது Playoff வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

‘டி20 உலக கிண்ணத்தினை இலங்கை அணி வெல்ல முடியும்’ – பானுக

குசல் மென்டிஸ் இற்கு கொவிட்

ஐபிஎல் தொடரில் இருந்து சுரேஷ் ரெய்னா நீக்கம்