உள்நாடுசூடான செய்திகள் 1

சந்தேகத்திற்கிடமானவர்கள் மூலமாக கொரோனா பரவும் அபயம்

(UTVNEWS | COLOMBO) – ஒரு சிலரின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக கொரோனா வைரஸ் பரவக்கூடிய வாய்ப்பும் இருப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கருத்து தெரிவிக்கையில்  போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,  சந்தேகத்திற்கிடமானவர்கள் மூலமாக கொரோனா வைரஸ் பரவக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது.

இவர்களை விரைவில் அடையாளம் கண்டு, அவர்களையும் தனிமைப்படுத்தல் செயற்பாட்டிற்கு உட்படுத்துவது முக்கியமாகும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும், இதுவரை 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

Related posts

தொழுவ பிரதேசத்தில் மற்றுமொரு சிறுத்தை கொலை

நூதனசாலைகளை மீள திறக்க தீர்மானம்

கடற்பரப்புகளில் 50 கி.மீற்றர் வேகத்தில் பலத்த காற்று