உள்நாடு

சந்தேகத்தின் பேரில் கைதானோரில் இருவருக்கு பிணை [VIDEO]

(UTV | BATTICALOA) – உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌஹித் ஜமாத் இயக்கத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 63 பேரில் இருவர் இன்று(31) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் ஏனைய 61 பேருக்கு ஜனவரி 14ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.ரிஸ்வான் முன்னிலையில் இன்று சந்தேகநபர்களை முன்னிலைப்படுத்தியபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியாவில் உள்ள தேசிய தௌஹித் ஜமாத் தலைமையகத்தில் ஆயுதப் பயிற்சி பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

நாளை பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை

விசேட சுற்றிவளைப்பில் 3,009 பேர் கைது

அரசாங்கத்தின் நடவடிக்கை மிகவும் சிறப்பானது – மகிந்த மகிழ்ச்சி.