உள்நாடுபிராந்தியம்

சதொச விற்பனை நிலையத்தில் தீ விபத்து

பதுளை, பண்டாரவளை, தர்மவிஜய மாவத்தை பகுதியில் உள்ள சதொச விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்து இன்று திங்கட்கிழமை (20) அதிகாலை 04.00 மணியளவில் ஏற்பட்டுள்ளது.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரவளை பொலிஸார் மற்றும் பண்டாரவளை மாநகர சபையின் தீயணைப்பு படையினர் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

10 அரசியல் கட்சிகள் கட்டுப்பணம் செலுத்தின – தேர்தல் ஆணைக்குழு

editor

வீதி ஒழுங்கு விதி மீறல்: தண்டப்பணம் செலுத்தும் காலம் நீடிப்பு

கொரோனா : 172 பேர் சிக்கினர்