சூடான செய்திகள் 1

சதொச நிறுவனத்தை உடைத்த மூவர் கைது

(UTV|NUWARELIYA)-நுவரெலியா சதொச நிறுவனத்தை உடைத்து பொருட்களை கொள்ளையிட்ட மூன்று சந்தேக நபர்கள் நுவரெலியா காவல்துறையால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளையிடப்பட்ட பொருட்களின் பெறுமதி சுமார் 70 ஆயிரம் ரூபாய் எனவும் சந்தேகநபரில் ஒருவர் சதொச நிறுவனத்தில் தொழில் புரிபவர் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவர்கள் கொள்ளையிட்ட பொருட்களை முச்சக்கரவண்டியின் மூலம் கொண்டு செல்ல முயற்சித்த போது நுவரெலியா, மாகாஸ்தோட்ட பகுதியில் காவல்துறையினர் மேற்கொண் திடீர் சோதனையில் சிக்கியுள்ளனர்.

சந்தேகநபர்கள் மூவரும் கெப்பிட்டிபொல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

 

Related posts

பேருந்து விபத்தில் 20 பேர் காயம்

புலமைப்பரிசில் நிதி அதிகரிப்பிற்கு அமைச்சரவை அனுமதி

எமது அறிவுரைகளை கவனத்தில் கொள்ளாமையே கோட்டபாய வீடு செல்ல காரணம்